அஸ்ஸலாமு அலைக்கும்!!செங்கிஸ் கான் ஆன்லைன் இணையத்தளம்தங்களை அன்புடன் வரவேற்கின்றது!!(விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டத்தார் தோன்றி, அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்து, நல்லதை ஏவித் தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்கிக் கொண்டுமிருக்கட்டும். இத்தகையோர் தாம் வெற்றி பெற்றவர்கள்.’ (திருக்குர்ஆன்: 3:104)!!!....

அன்புச் சகோதரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

Written By செங்கிஸ்கான் on Sunday, 12 June 2011 | 23:39


அன்புச்சகோதரர்களுக்கு,
செங்கிஸ்கான் எழுதும் இந்தக் கடிதம் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நான் எழுதுகிறேன். நான் உம்ரா செய்யச் சென்றதற்கு முன்பு  நான் உண்டாக்கி வளர்த்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து என்னை நீக்குவதற்கு சதி செய்தார்கள். அதாவது பிஜே மீது எனக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
ஆனால் அதேநேரம் அவரை எதிர்க்கும் இந்த பாக்கரின் வகையறாக்கள் யோக்கியர்களாக இருக்கிறார்களா? என்றால் இல்லை. இவர்களின் பிராடு பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி இருந்தேன். அத்தனையும் உண்மை. இந்தக் கடிதங்கள் காரணமாக அவர்களால் என்னை இந்த இயக்கத்தை விட்டும் நீக்க முடியவில்லை.  ஆனால் நான் உம்ரா சென்று விட்டதால் இங்கு என்ன நடந்தது எனக்குத் தெரியாது.
நான் உம்ராவில் இருந்த போது எனக்கு ஒரு ஞானம் உண்டானது. அதாவது இந்த அயோக்கியர்களுடன் மீண்டும் சேர்ந்தால் என் இபாதாவெல்லாம் கெட்டு நாசமாகிவிடும் என்பதால் இந்த அயோக்கியர்கள் பொறுப்பாளர்களாக இருக்கும்  இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் நீடிக்க நான் விரும்பவில்லை.
அதே நேரம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது நான் உண்டாக்கி வளர்த்த இயக்கம். இதைக் கைப்பற்றும் வரை நான் அமைதிகாப்பது தான் சிறந்தது என்று தான் இத்தனை நாள் நான் பொறுமையாக இருக்கிறேன். உங்கள் இயக்கத்தை விட்டு தற்காலிகமாக விலகி இருக்கிறேன். எனவே என்னுடைய வெப்சைட்டை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று நான் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் கூட இந்த அயோக்கியர்கள் அதை என்னிடம் ஒப்படைக்கவில்லை. அதனுடைய பாஸ்வேர்டையும் லாக் செய்து விட்டனர். இதனால் தான் என்னால் என் கருத்துக்களை வெளிப்படுத்த முடியவில்லை.
என் முந்தைய வெப்சைட்டை வடிவமைத்துத் தந்த திருச்சி ஈஸாவிடம் சென்று அதேபோல வெப்சைட் வடிவமைத்து தாருங்கள் எனக்கேட்டேன். ஆனால் அவர்களின் மிரட்டலால் திருச்சி ஈஸா மறுத்து விட்டார். ஆனால் அவரது சகோதரர் திருச்சி மூஸாவிடம் சென்று என் வெப்சைட் மாதிரியை வடிவமைத்துக் கேட்டு இப்போது எழுதத் துவங்கி விட்டேன். இனி என் உரைகள் வின் டிவியில் வரக்கூடாது என அவர்களிடம் கடிதம் மூலமாகத் தெரிவித்து விட்டேன். எனவே இனி மேல் இது மட்டும் தான் என்னுடைய அதிகாரப்பூர்வமான வெப்சைட் என்பதையும் என் பெயரில் இயங்கும் அந்த பழைய வெப்சைட் சில அயோக்கியர்களின் கைவண்ணத்தில் அவதூறுகளை எழுதி வந்தால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்றும் இதன் மூலம் நான் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
அன்புடன்
செங்கிஸ்கான்
மாநிலச் செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 

2 comments:

Mujibur Rahman MBA said...

பொய்யர்கள் வெளியிட்ட போர்ஜரி கடிதத்திற்கு செங்கிஸ்கான் விளக்கம்!

அன்பிற்கினிய இணைய தள வாசகர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் !

கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் உம்ரா சென்று இருந்ததால் செய்திகள் மற்றும் ஆக்கங்கள் வெளியிட முடியாமல் போனது , மேலும் உம்ரா சென்று விட்டு கடந்த 16.05.11 அன்று திரும்பி விட்டாலும் கூட செய்திகள் வெளியிட முடியாததற்கு காரணம் எனது மாமனார் கீழே விழுந்து கால் முறிந்து அறுவை சிகிச்சை செய்து படுத்த படுக்கையாக இருந்ததால், அவரை பார்ப்பதற்காக சொந்த ஊர் சென்று குடும்பத்தோடு தங்க நேரிட்டதாலும் , நமது தளத்தில் செய்திகள் வெளியிட முடிய வில்லை.

இதை பயன் படுத்தி அவதூறு ஜமாத்தினர் தங்களின் பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எஸ்.எம் பாக்கருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு என்றும், அவர் என்னை இயக்கத்தை விட்டு வெளியேற்ற சதி செய்வதாகவும், நான் கருத்து வேறுபாட்டால் எஸ்.எம்.பாக்கருக்கு கடிதம் எழுதியது போல் பொய்யாக ஒரு கடிதத்தை எழுதியதோடு போர்ஜரியாக எனது கையெழுத்தையும் போட்டுள்ளனர்.

போலி கையெழுத்து போடுவதை பிழைப்பாக கொண்டவர்கள் என் கையெழுத்தையாவது, த.த.ஜ.வில் உள்ள பழைய ஆவணங்களில் பார்த்து ஒழுங்காக போட்டிருக்கலாம்! என்ன செய்வது இ.த.ஜ.வை விட்டு நான் வெளியேற வேண்டும் என்கிற இவர்களின் பேராசை இந்த இழி செயலை செய்ய வைத்துள்ளது! அந்த அளவுக்கு நமது எழுத்தும் , பேச்சும் இவர்களின் முகத்திரையை கிழித்து பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது . என்பது இதன் மூலம் தெரிய வருகிறது!

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு? நான் உம்ராவில் இருந்து வந்ததும் உண்மை வெளியாகி எனக்கும் பாக்கருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிய வந்தால், நம்முடைய ஆதரவாளர்களே நம்மை கேவலமாக பார்ப்பார்களே! என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் இவர்களால் எப்படி இது போன்ற பொய்களை எழுதவும் பரப்பவும் முடிகிறது? அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாத அரசியல்வாதிகள் கூட இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதில்லை.

கருணாநிதி கூட 1990-இல் ஜெயலலிதா எழுதிய ஆனால் வெளியிடாத கடிதத்தை வெளியிட்டு கேவலப் பட்டார், ஆனால் அண்ணனோ நான் எழுதாத கடிதத்தை எழுதியதாக வெளியிட்டு கேவலப்பட்டு நிற்கிறார்.

இந்த அவதூறு விஷயம் நான் உம்ராவில் இருந்த போது எனக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது ! நான் மிகுந்த மன வேதனை கொண்டு காஃபாவில் நின்று கை ஏந்தினேன், எப்படி நபி ஸல் அவர்கள் ஒட்டக குடலை சுமந்து கொண்டு கைஎந்தினார்களோ அதே போன்று அதே காஃபாவில் நின்று "யா! அல்லாஹ்! இந்த அவதூறு பரப்பியோரை நீ பார்த்துக் கொள்" என்று அவனிடம் ஒப்படைத்து விட்டு வந்துள்ளேன்!

தாமதமானாலும் அல்லாஹ்வின் தண்டனை கடுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!

மேலும் இணையத்தளத்தில் மட்டுமின்றி இந்த போர்ஜரி கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து பரப்பிக் கொண்டுள்ளனர், மேலும் இது குறித்து த,த,ஜ வினர் உள்பட பல சகோதரர்கள் நம்மிடம் விளக்கம் கேட்டனர்,கேட்கும் அனைவருக்கும் நான் சொல்வதெல்லாம் ' இந்த கடிதத்தை எழுதியவன், திருத்தியவன், வெளியிட்டவன், பரப்பியவர்கள் அத்தனை பேர்மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் ! என பிரார்த்தியுங்கள் அது போதும் ' எனக் கூறியதை அடுத்து 'அவர்களின் ஆதரவாளர்கள் கூட இந்த விசயத்தில் வருந்துகின்றனர்.

மேலும் எனக்கும் சகோதரர் எஸ்,எம்,பாக்கர் அவர்களுக்கும் எந்த பிணக்கோ கோபமோ இல்லை என்றும் , தொடர்ந்து இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளேன் என்பதையும் இன்ஷா அல்லாஹ் இவர்களை தோலுரிக்கின்ற வேலை தொடரும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண் : செங்கிஸ்கான்,
மாநில செயலாளர்,
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.

சென்னை-1.

செங்கிஸ்கான் said...

அதற்கான பதிலே போர்ஜரி தான் சகோதரரே!

Post a Comment