அஸ்ஸலாமு அலைக்கும்!!செங்கிஸ் கான் ஆன்லைன் இணையத்தளம்தங்களை அன்புடன் வரவேற்கின்றது!!(விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டத்தார் தோன்றி, அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்து, நல்லதை ஏவித் தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்கிக் கொண்டுமிருக்கட்டும். இத்தகையோர் தாம் வெற்றி பெற்றவர்கள்.’ (திருக்குர்ஆன்: 3:104)!!!....

இறைமறை

HIJRA CALENDER

பிஜே/ததஜ

இந்திய தவ்ஹீத்
ஜமா அத் இணைய தளங்கள்.

இன்னும் கெட்டுப்போவோம் எவ்வளவு பந்தயம்?

Written By செங்கிஸ்கான் on Wednesday, 4 May 2011 | 10:56

-உளறும் கிறுக்கர்கள்


மக்கள் ரிபோர்ட் செய்தியைப் பற்றி தனிநபர் ஜமாத்தினர் காழ்ப்புணர்ச்சி கொண்டு எழுதி இருந்ததற்கு -நாம் பதில் சொல்லும் விதமாக அவர்களது அபகரிக்கப்பட்ட உணர்வற்ற உணர்வு பேப்பரில் வெளியாகி இருந்த தவறை நாகரிகமாகவே இப்படி சுட்டிக்காட்டி இருந்தோம்.

"மார்ச் -25-31-2011 தேதி இட்ட இதழில் பக்கம் 7 இல் , 'முஸ்லிம் கட்சிகளா? முஸ்லிம் எதிர்ப்புக் கட்சிகளா?' என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் கட்டுரையில்..."சுமார் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் துறைமுகம் தொகுதி,இன்னும் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி,இன்னும் ஒரு லட்சம் முஸ்லிம்கள் வாழும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி ஆகியவை மத்திய சென்னை சட்டமன்ற தொகுதிக்குள் வருகின்றன "என குறிப்பிட்டு தாங்கள் அரசியல் சூனியங்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.
சேப்பாக்கம் &திருவல்லிக்கேணி என்பது ஒரு தொகுதிதான் எனறோ,தொகுதி மறு சீரமைப்பின் மூலம் அது மாற்றியமைக்கப்படிருக்கிறது என்றோ அறியாத இவர்கள் அரசியல் கட்டுரைகள் எழுதும் அவலம் உணர்வு பத்திரிகையில் மட்டும் தான் நடக்கும்.
அதே போல ,ஏப்ரல் 1-7-2011 தேதியிட்ட அதே இதழில்,11 ஆம் பக்கத்தில் ""சரத்குமாரின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்கள்"என எழுதி இருக்கிறார்கள்.அரசியல் கட்சிகளின் பெயரை கூட ஒழுங்காக தெரிந்து வைத்துக்கொள்ளாமல் ஏடா கூடமாக எழுதும் இவர்கள் மக்கள் ரிபோர்ட்டை பற்றி குறை கூற வெட்கப்படவேண்டும்."


நமது விமர்சனத்துக்கு பதில் என்ற பெயரில் அறிவு கெட்டுப்போய் ,கேனத்தனமாக உளறியுள்ளதோடு ,நம் மீது வெறி நாய் போல பாய்ந்துமிருக்கிறார்கள்...
நமது மேற்கண்ட விமர்சனத்துக்கு அவர்களின் பதில் பின்வருமாறு...

அதாவது இந்த செய்தி துவங்கும் போது ஹைதர் அலி அவர்கள் மமகட்சி சார்பில் போட்டியிட்ட போது வாங்கிய வாக்குகள் குறித்து பேசுகிறது. அவர் போட்டியிட்ட போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிகள் ஒன்றாக இருந்தன என்பதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் தொகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. வாக்குகள் அதே அளவில் தானே இருந்தன? இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து சேப்பாக்கம் 1 லட்சம் முஸ்லீம்கள், திருவல்லிக்கேணி ஒரு லட்சம் முஸ்லீம்கள் என எழுதப்பட்டுள்ளது. இதிலே என்ன தவறு? இரண்டு தொகுதிகளையும் இணைத்ததால் மொத்த ஓட்டுகள் 2 லட்சத்திலிருந்து 1 லட்சமாக குறைக்கப்பட்டு விட்டதா?


அறிவுக்கும் இந்த பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? சேப்பாக்கம்,திருவல்லிக்கேணி இரண்டும் ஒரு தொகுதிதான் என்பது கூட இவர்களுக்கு தெரியவில்லை என்பது தான் நமது விமர்சனம்.இந்த தவறை ஒப்புக்கொண்டிருந்தால் அவர்களை நேர்மையானவர்கள் என ஏற்றுக்கொள்ளலாம்.ஆனால்."தொகுதிகள் ஒன்றாக்கப்பட்டு விட்டன.வாக்குகள் அதே அளவில் தானே உள்ளன? மொத்த வாக்குகள் 2 லட்சத்திலிருந்து 1 லட்சமாக குறைக்கப்பட்டு விட்டதா?" என்று சம்மந்தமில்லாமல்-நமது கேள்வியை கூட புரிந்து கொள்ளாமல் கேவலப்பட்டிருக்கிறார்கள்!
நாம் வாக்கு எண்ணிக்கையை பற்றியா கேள்வி எழுப்பினோம்? நாம் கேட்டது ஒன்று இவர்கள் பதிலளிப்பது வேறொன்று என்றால் இதை -"அண்ணன் பொய் ஜே.சண்முக சுந்தரத்திற்கு வணக்கம் சொன்னது சரியா என்றால்....அண்ணன் பொய்.ஜே ஆற்காடு டீச்சரோடு அல்பா லாட்ஜுக்கு போனது என்ன தவறு? என்று பதில் சொல்வது போல் உள்ளது என்று நாம் சொன்னால் அதில் தவறிருக்க முடியுமா?

சகோ.ஹைதர் அலி போட்டி இட்ட போது, வாங்கிய வாக்கு குறித்து அந்த செய்தி பேசுகிறது என்று வேறு முட்டுக்கொடுக்கப் பார்க்கிறார்கள்.ஹைதர் அலி போட்டி இட்டது ஹைதர் காலத்தில் என்று கூட இருக்காட்டும்...இபோழுது அதைப்பற்றி எழுதினாலும்...நடப்பு நிலவரத்தை அல்லவா எழுத வேண்டும்!.அந்த அடிப்படையில், செபக்கம்&திருவல்லிக்கேணி தொகுதியில் 2 லட்சம் முஸ்லிம்கள் என்றல்லவா எழுத வேண்டும்.ஆக,செய்து விட்ட தவறை நிலை நிறுத்த முயற்சி செய்து..முகத்தில் கரியை பூசிக்கொண்டது தான் மிச்சம்.

இன்னொரு விஷயம்..."சரத்குமாரின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு 2 இடங்கள்" என்று அவர்கள் உளறியதையும் நாம் எடுத்துக்காட்டினோம்.அதை ஒப்புக்கொள்ளாமல் ஜகா வாங்கியுள்ளனர்.ஆக நாங்கள் தவறே செய்தாலும் அதற்கும் எதையாவது செய்து முட்டுக்கொடுப்போம் என்கிறார்கள்.இவர்கள் செய்யும் தவறை (உதாரணம்:வணக்கம் சொன்ன விஷயம்) ஒப்புக்கொண்டாலே பாதி தக்லீதிலிருந்து மீண்டு விடுவார்கள்.ஆனால் அதை செய்யத்தான் அவர்கள் தயாரில்லையே!இன்னும் கெட்டுப்போவோம் எவ்வளவு பந்தயம் என்று கேட்கும் நிலையில் தானே இருக்கிறார்கள்.!இப்படியும் கிறுக்குகள்.?
10:56 | 0 comments | Read More

அரை டவுசர் போட்டு தொழக் கூடாது என குரான் ஹதிஸ் அடிப்படையில் கூற முடியுமா? அண்ணன் ஜமாத்தின் அபத்தமான சவால்?


அரை டவுசர் போட்டு தொழக் கூடாது என
குரான் ஹதிஸ் அடிப்படையில் கூற முடியுமா?
அண்ணன் ஜமாத்தின் அபத்தமான சவால்?

பெரிதாக்கி படிக்க படத்தை கிளிக் செய்யவும்!
10:55 | 0 comments | Read More

டவுசர் நாயகன் அன்றும்- இன்றும்!


டவுசர் போ

ட்டு தொழக்கூடாது என்பதற்கு என்ன குரா
ன் ஹதிஸ் ஆதாரம் என்று கேட்பவர்கள் நாளை ஜட்
டி போட்டு தொழலாம்! என கூறவும் தயங்க மாட்டார்கள்! இவர்களை ந
ம்பி பள்ளிக்கு சென்று பின்

நின்று தொழும் பெண்கள் நிலைதான் பரிதாபம்! இன்றைக்கு என்ன ஆதாரம் என்று கேட்கும் அண்ணனின் பக்தர்களுக்கு அன்று அந்நஜாத் ப
த்திரிகையில் 1987 ஜூன் மாத இதழில் 28.27.28.,29,30,3132,33,34 பக்கங்களில் அவர் ஆண்களின் உடை பற்றி எழுதிய கட்டுரையை தருகிறோம்!

அன்று

அபூமுஹம்மத்(PJ)
ஆண்களின் ஆடைகள்
மனிதன் இயல்பிலேயே தனது மர்ம உறுப்புகளை மறைத்து வாழ்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். இதனால் தான் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், மதங்களுக்கு அப்பாற்பட்ட நாத்திகர்களும் ஆடைகள் அணிந்து தங்கள் உடலின் பாகங்களை மறைத்து கொள்வதை நாம் காண்கிறோம். இது மனித இயல்பு என்பதை திருக்குர்ஆனும் நமக்கு எடுத்தோதுகின்றது,
ஆதம்(அலை) அவர்களும், அவர்களின் மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் தங்கள் உடல் உறுப்புக்கள் வெளியில் தெரியும்போது அவசர அவசரமாக, சுவனத்தில் இலைகளால் தங்கள் உடலின் முக்கிய பகுதிகளை மறைத்துக் கொள்ளத் துவங்கியதை திருக்குர்ஆனின் 7 :22 வசனம கூறுகிறது.
கணவன், மனைவி மட்டுமே இருந்த சந்தர்பத்தில் கூட தங்கள் உறுப்புக்களைப் பார்ப்பதற்கு வேறு மனிதர்கள் எவரும் இல்லை என்ற சந்தர்ப்பத்தில் கூட இறைவனிடமிருந்து உத்தரவு ஏதும் வராமலே தாங்களாகவே தங்கள் மறைவான பகுதிகளை அவர்கள் மறைத்துக் கொள்ளத் துவங்கினார்கள் என்பதிலிருந்து , ” இது மனிதனின் இயல்பு” என்று உணரலாம்.
மனிதன் எந்த அளவுக்குத் தன் உடலை மறைக்க வேண்டியது அவசியம்? எந்த வகையான ஆடைகளால் மறைக்க வேண்டும்? எந்த வகைத் துணிகளால் மறைக்க வேண்டும்? என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இஸ்லாம் விதிக்காத பல நிபந்தனைகளை தங்கள் இஷ்டத்திற்கு விதித்துக் கொண்டு, இஸ்லாத்திற்கு தவறான தோற்றத்தை ஏற்படுத்தி விட்டனர்.
“ஆண்களின் ஆடைகள்” எப்படி அமைய வேண்டும்? பெண்களின் ஆடைகள் எப்படி அமைய வேண்டும்? எப்படி அமையக் கூடாது என்பதைக் குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் நாம் காண்போம். முதலில் ஆண்களுக்கான ஆடைகளை நமது ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
ஆண்களின் ஆடைகள்
ஆண்களுக்கு இஸ்லாம் ஆடை விஷயத்தில் சில தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தடைகளைத்தவிர வேறு எவ்விதமாக வேண்டுமானாலும் ஆடை அணிந்து கொள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது. எனவே எந்தவிதமான ஆடைகள் தடுக்கப்பட்டுள்ளன என்ற விபரத்தை முதலில் காண்போம்.
பட்டாடைகள்
ஆண்களுக்கு பட்டாடைகள் அணிவதை நபி(ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளனர். கலப்பாக அணியவோ, தனிப்பட்டாகவோ எவ்விதத்திலும் ஆண்கள் பட்டாடைகளைப் பயன்படுத்த நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை.
“பட்டாடைகளை அணியாதீர்கள்! ஏனெனில் இவ்வுலகில் பட்டாடை அணிபவன் மறுமையில் அதை அணிய முடியாது” ஏன்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
“யாருக்கு மறுமையில் நற்பாக்கியம் இல்லையோ அவன் தான் பட்டாடை அணிவான்” என்று நபி(ஸல்)கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம்,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா
நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் பட்டாடை அணிந்ததாக வந்துள்ள சில ஹதீதுகளின் அடிப்படையில் சிலர் பட்டாடை அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். இது ஏற்க இயலாத வாதமாகும். நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களில் சிலரும் பட்டாடை அணிந்துள்ளது உண்மைதான். ஆனால் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் தான் இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தது. பிறகு அது தடுக்கப்பட்டு விட்டது என்பதற்கு ஹதீஸ்களின் ஆதாரங்கள் உள்ளன. எனவே தடுக்கப்படுவதற்கு முன் அவர்கள் அணிந்திருந்ததாகவே கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்களுக்கு பட்டாடை ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. அதை அணிந்து நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். தொழுது முடித்தபின் வெறுப்புடன் கடுமையாகக் கழற்றினார்கள்.
“இது இறை அச்சமுடையோருக்கு கூடாத ஒன்றாகும்” என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா இப்னு ஆழிர்(ரழி) நூல் : முஸ்லிம்
இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தடை செய்வதற்குமுன் அவர்களே அணிந்திருக்கிறார்கள் என்பதையும், அதன் பின்னர்தான் தடுக்கப்பட்டது என்பதையும் தெளிவாக உணரலாம்.
நபி(ஸல்) அவர்கள் பட்டாடை அணிந்து தொழுதார்கள். பின் கழற்றி வைத்துவிட்டு “ஜிப்ரில்(அலை) அவர்கள் பட்டாடை அணிவதை விட்டும் எனக்குத் தடை உத்தரவு பிறப்பித்து விட்டார்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி) நூல் : முஸ்லிம்
ஜிப்ரில்(அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தடுப்பதற்கு முன், அதை அணிவதற்கு அனுமதி இருந்துள்ளதை இதன் மூலம் அறியலாம். இந்த ஹதீஸ்களில் ஆண், பெண் என்று பேதப்படுத்தாமல் பொதுவாகவே தடை உள்ளது. ஆனாலும், இந்தத் தடை ஆண்களுக்கு மட்டுமே என்று தெளிவு படுத்தக் கூடிய ஹதீஸ்களை நாம் காண்போம்.
“தங்கமும், பட்டும் என் சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அனமதிக்கப்பட்டுள்ளன” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல்கள் : அஹ்மத், நஸயீ, திர்மிதீ, அபூதாவூத், ஹாகிம், தப்ரானி
நபி(ஸல்) அவர்கள் தன் வலது கரத்தில் ‘பட்டை’யும் இடது கரத்தில் தங்கத்தையும் எடுத்துக் கொண்டு “இவ்விரண்டும் என் உம்மத்தில் ஆண்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டள்ளன” என்றும் கூறினார்கள். அறிவிப்பவர் : அலீ(ரழி)
நூல்கள் : அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான்
குறைந்த அளவு அனுமதி உண்டு
“இரண்டு விரல்கள் அளவுக்கோ, மூன்று விரல்கள் அளவுக்கோ, நான்கு விரல்கள் அளவுக்கோ தவிர (அதைவிட அதிகமாக) ‘பட்டு’ அணிவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்”.
அறிவிப்பவர் : உமர்(ரழி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸயீ, அபூதாவுத்
இந்த அளவுக்கு மட்டும் ஆண்கள் ‘பட்டு’ பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
சிறங்கு உள்ளவர்கள்
சிரங்கு உள்ளவர்கள் மற்ற ஆடைகள் அணிவதால் உறுத்தல் ஏற்பட்டு மேலும் புண்ணாக்கி விடலாம் என்பதால் அவர்கள் ‘பட்டு’ அணியலாம். ‘பட்டு” உடலை உறுத்தாது என்பதே காரணம்.
“அப்துர்ரஹ்மான் இப்னு அவ்பு, ஜுபைர் இருவருக்கும் சிரங்கு இருந்த காரணத்தால் ‘பட்டு’அணிய நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா.
பட்டு விரிப்புகள்
உட்காருவதற்கோ, படுத்துக் கொள்வதற்கோ ‘பட்டு’ விரிப்புக்கள் பயன்படுத்தக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள் “தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் குடிப்பதையும் , அவற்றில் உண்ணுவதையும் , ‘பட்டு’ அணிவதையும், அதன் மீது அமர்வதையும் தடை செய்தனர்.
அறிவிப்பவர் : ஹுதைபா(ரழி) நூல் : புகாரி
‘பட்டு’ தவிர எந்தத் துணிகளையும் ஆண்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி பெறுகிறார்கள். வேறு எந்த வகைத் துணியையும் நபி(ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.
கரண்டைக்குக் கீழே இறங்கக் கூடாது!
ஆண்கள் அணிகின்ற ஆடைகள் நபி(ஸல்) அவர்கள் வரையறுத்துக் காட்டிய அளவைவிட கீழே இறக்கக் கூடாது! “பெருமையின் காரணமாக எவன் தனது ஆடைகளை கீழிறங்கும்படி இழுத்துச் செல்கிறானோ அவனை அல்லாஹ் பார்க்க மாட்டான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி)
நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், முஅத்தா, திர்மிதீ, நஸயீ
“முதல் ஹதீஸ் பொதுவாக ஆடையைக் கீழறங்கும்படி அணியக் கூடாது” என்பதை விளக்குகின்றது. “இரண்டாவது ஹதீஸ் கீழ் ஆடைகள் கரண்டைக் காலைவிட இறங்கக் கூடாது” என்று அளவை நிர்ணயம் செய்கின்றது. அவ்வாறு இறங்குவதைக் கண்டித்து இன்னும் பல நபிமொழிகள் உள்ளன.
“எவர் தனது ஆடையைப் பெருமையின் காரணமாக இழுத்தும் செல்கிறாரோ அவரைக் கியாமத் நாளில் அல்லாஹ் பார்க்கமாட்டான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, அபூபக்ரு(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எனது கைலியின் ஒரு பகுதி கீழே இறங்கி விடுகின்றதே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) “நீர் பெருமையின் காரணமாக அவ்வாறு செய்பவர் அல்ல” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி) நூல் : புகாரி.
முழங்காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்தால்…?
நபி(ஸல்) அவர்கள் உட்பட ஸஹாபாக்களும், மற்றும் அரபியரும் முழங்காலைக் கட்டிக் கொண்டு சர்வசாதாரணமாக அமர்ந்திருப்பார்கள். (இவ்வாறு அமர்வதை நம் தழிழகத்து முஸ்லிம் பெண்கள் ‘தரித்திரம்’ என்று தடுப்பர். அவர்களின் மார்க்க அறிவு அந்த அளவு இருக்கின்றது)
மர்மஸ்தானத்தை மறைக்கும் ஆடை எதுவும் உள்ளே அணியாமல் ஒரு போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டிருப்பவர்கள், முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்காருவதை நபி(ஸல்) தடுத்தனர். அவ்வாறு கட்டிக் கொண்டு உட்காருவதை நபி(ஸல்) தடுத்தனர். அவ்வாறு அமர்வதால் போர்வை விரியும் போது மர்மஸ்தானம் வெளியே தெரிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மேலும் உள்ளே மர்மஸ்தானத்தை மறைக்கும் ஆடைகள் அணியாமல் ஒரு போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டிருப்பவர்கள் கைகளையும் போர்வைக்குள் மறைத்துக் கொண்டு அணியக் கூடாது. காரணம் அவசரத் தேவைகளுக்காக கைகளை தீடிரென வெளியே எடுக்க நேர்ந்தால் போர்வை விலகி மர்மஸ்தானங்களை வெளியே தெரிய நேரிடும்.
“தன்னுடைய மர்மஸ்தானத்தின் மீது எந்த ஆடையுமின்றி எவரும் முழங்காலைகளைக் கட்டிக்கொண்டு அமர வேண்டாம்! (கைகள் உள்ளிருக்கும்படி) முற்றாகப் போர்த்திக் கொள்ளவும் வேண்டாம்” என் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்
மறைக்கப்பட வேண்டியவை
“ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை மறைக்க வேண்டும்” என்பதைத்தவிர மற்ற உறுப்புக்களை கட்டாயம் மறைக்க வேண்டியதில்லை. அதற்குரிய ஆதாரங்களைக் கீழே காண்போம்.
“உங்களில் எவரேனும் தன்னுடைய வேலைக்காரனுக்கோ, அடிமைக்கோ மணமுடிக்கும் காலம் வரும்போது தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியையும், முழங்காலுக்கு மேலு உள்ள பகுதியையும் பார்க்க வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்ரு இப்னு ஷுஐபு(ரழி) நூல் : அபூதாவூது
தனது ஆண் அடிமையின் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதியை முழங்காலுக்கு மேலே உள்ள பகுதியைக் கூட பார்க்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதிலிருந்து அந்தப் பகுதிகளை ஆண்கள் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பது தெளிவு.
குறிப்பாக தொடைப் பகுதியைக் கட்டாயம் மறைக்க வேண்டும் “அலியே! உன் இரு தொடைகளையும் நீ வெளிப் படுத்தாதே!” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலி(ரழி) நூல்கள் : அபூதாவூது, இப்னுமாஜா
“மஃமர்(ரழி) என்பவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து செல்லும்போது அவரது இரு தொடைகளும் திறந்திருக்கக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் மஃமரே! உன் தொடைகளை மூடிக்கொள் ஏனெனில் இரு தொடைகளும் மறைக்கப் படவேண்டிய பகுதிகளாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மது இப்னு ஐஹ்ஷ்(ரழி) நூல் : அஹ்மத்
இதுபோன்ற கருத்துக்களைக் கொண்ட பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து முழங்கால் வரை அவசியம் மறைக்கப் கடமைப் பட்டுள்ளனர். குறிப்பாகத் தொடை பகுதியை அவசியம் மறைக்க வேண்டும்.
இவ்வாறு மறைக்க வேண்டும் என்ற விதியிலிருந்து இல்லற நேரத்தில் மனைவியுடன் தனித்திருக்கும் நேரம் விலக்குப் பெறும். அந்த நேரத்தில் மறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
“அல்லாஹ்வின் தூதரே! எங்கள் மறைவான உறுப்புக்களை எந்த நேரத்தில் மறைக்க வேண்டும்? எந்த நேரத்தில் மறைக்காது விட்டு விடலாம்? என்று நான் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் “உன் மனைவியிடமும் உன் அடிமைப் பெண்ணிடமும் தவிர மற்ற நேரங்களில் மறைவுப் பகுதிகளை மறைத்துக் கொள்!” என்றனர். எங்களில் எவரும் தனித்திருக்கும் போதுமா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “(ஆம்! வெட்கப் படுவதற்கு அல்லாஹ் மிகவும் தகுதியானவன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பஹ்ல் இப்னு ஹகீம்(ரழி)
நூல்கள் : அபூதாவூது, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா
இதுதவிர மற்ற நேரங்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளை அவசியம் மறைத்தாக வேண்டும். ஒரு சில அறிஞர்கள் “இந்த அளவுகூட மறைக்க வேண்டியதில்லை; முன் துவாரம், பின் துவாரம் இவைகளை மறைத்துக் கொண்டால் போதுமானது” என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸ்களை எடுத்து வைக்கின்றனர்.
1) “கைபர் போரின் போது, நபி(ஸல்) அவர்கள் தமது கைலியை தொடைப் பகுதியை விட்டும் நீக்க நேரிட்டது. அவர்களின் தொடையின் வெண்மைப் பகுதியை நான் கண்டேன்”
அறிவிப்பவர் : அனஸ்(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்
2) “நபி(ஸல்) அவர்கள் ஈரமான ஒரு இடத்தில் முழங்கால்களைத் திறந்தவர்களாக இருந்தனர். உஸ்மான்(ரழி) அவர்கள் நுழைந்த போது அதை மூடிக் கொண்டனர்”
அறிவிப்பவர் : அபூமூஸா(ரழி) நூல் : புகாரி.
3) நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது தன் முழங்கால் தெரியும் அளவுக்கு தன் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கிப் பிடித்தவராக அபூபக்ரு(ரழி) அவர்கள் வந்தார்கள். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் “உங்கள் தோழர் ரொம்பவும் ஆத்திரத்துடன் வருகிறார்” என்று கூறினார்கள் . (இந்த ஹதீஸில் உமர்(ரழி) அவர்களுக்கும், அபூபக்ரு (ரழி) அவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு தகராறில் அபூபக்ரு(ரழி) அவர்கள் மிகவும் ஆத்திரத்துடன் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட வருவது கூறப்படுகிறது.
அறிவிப்பவர் : அபுத்தர்தா(ரழி) நூல்கள் : புகாரி, அஹ்மத்
4) ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தொடைப் பகுதி வெளியில் தெரிந்த நிலையில் அமர்ந்திருந்தனர். அவர்களைக் காண அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் அப்படியே அமர்ந்திருந்தனர். உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் தன் ஆடையைச் சரி செய்து கொண்டனர். இதைக் கண்ட ஆயிஷா(ரழி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அபூபக்ரு(ரழி) வந்த போதும், உமர்(ரழி) வந்த போதும் சும்மா இருந்த நீங்கள் , உஸ்மான்(ரழி) வந்த போது மட்டும் ஆடையைச் சரி செய்து கொண்டீர்களே! (இது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மலக்குகளே அவரைக் கண்டு வெட்கப்படும் போது நான் வெட்கப்பட வேண்டாமா?
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அஹ்மத்
(இதே கருத்தில் முஸ்லிமிலும், பைஹகீயிலும் ஹதீஸ்கள் உண்டு)
இந்த ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சில அறிஞர்கள் “தொடைப் பகுதியை மறைக்க வேண்டியது அவசியமில்லை” என்கின்றனர். அவர்கள் எடுத்துக் காட்டுகின்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் சந்தேகம் இல்லை, எனினும் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இந்தக் கருத்தை ஏற்கலாம்.
தொடையைத் திறந்திருப்பதை நபி(ஸல்) அவர்களே வன்மையாகக் கண்டித்துள்ளதால், இந்த ஹதீஸ்களில் கூறப்படுபவை தற்செயலாக திட்டமிடாமல் நடந்ததாகத்தான் கருத வேண்டும்.
அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கும் முதல் ஹதீஸில் கூறப்படுவது ‘கைபர்’ போரில் நடந்தது. போர்க்களத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவ்வாறு அவர்களை அறியாமல் விலகி இருக்கலாம்.
இரண்டாவது ஹதீஸில் ஈரமான இடத்தில் ஆடை நனைந்துவிடக்கூடாது என்று சற்று கைலியை உயர்த்தி இருந்த போது முழங்கால் தென்பட்டதாக தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது ஹதீஸில் அபூபக்ரு(ரழி) அவர்கள் உமர்)ரழி) அவர்களுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கோபத்துடன் தங்கள் ஆடையின் ஒரு பகுதியைத் தூக்கியவர்களாக வந்தபோது அவர்களின் முழங்கால் தெரிந்துள்ளது.
நான்காவது ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தன் தொடைப் பகுதி வெளியில் தெரிவதை அறியாமலிருக்கலாம். சிலர் முன்னிலையில் சிலர் அதிகப்படியான வெட்க உணர்வுடன் இருப்பதை நான் சாதாரணமாகக் காணலாம். அந்த அடிப்படையில் உஸ்மான்(ரழி) அவர்கள் வந்த போது தனது ஆடைகளைச் சரி செய்திருக்கலாம். இவ்வாறு நாம் கருதவதற்குக் காரணம், நபி(ஸல்) அவர்கள் தொடையை மறைக்கும்படி பலமான உத்திரவு பிறப்பித்துள்ளதால், அவர்களே அந்த உத்திரவுக்கு மாற்றமாக நடந்திருக்க மாட்டார்கள் என்பது தான்.
நம்மை அறியாமல் தற்செயலாகத் தெரிந்து விட்டால் அதில் தவறில்லை என்று தான் இந்த ஹதீஸிகளிலிருந்து நாம் முடிவெடுக்க முடியும். “நிரந்தரமாக எப்பொதும் அப்படி இருக்கலாம்” என்று கூறுவோர் நாம் முன்னர் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களை நிராகரித்தவர்களாக ஆக நேரும்.
ஆண்களின் ஆடைகள் பற்றி மேலும் பல விதிகளை இனி காண்போம். (தொடரும்)
அந்நஜாத்: ஜுன், 1987 – ஷவ்வால், 1407

அன்றைக்கு தொளுகையல்லாத நேரத்திலேயே தொடை தெரியக்கூடாது என வரிந்து காட்டி விளக்கம கொடுக்கும் அண்ணன் இன்று தொடை தெரிய தொழுவதை தடுக்க முடியுமா எனக் கேட்பது தான் மார்கத்தில் விளையாடும் மாமனிதர் என்பதற்கு சான்று ! இவரை கண் மூடித்தனமாக பின் பற்றும் சகோதரர்கள் பின் வரும் குரான் ஹதீஸை விளங்கி, பி .ஜே .வை அல்லாஹ்வாக்காமல் தக்லீது எனும் வழிகேட்டில் இருந்து விலகி நேர் வழி பெறவேண்டும் .

'யூதர்களும் கிறிஸ்தவர்களும் அல்லாஹ்வை விட்டு விட்டு தங்கள் பாதிரிமார்களையும் , மத குருமார்களையும் கடவுளாக்கி கொண்டார்கள் " எனும் இறைவசனம் இறங்கிய போது கிறிஸ்தவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்த சஹாபாக்கள் நாங்கள் அவ்வாறு செய்யவில்லையே யா ரசுலல்லாஹ் ! என்று சொன்ன போது உங்கள் மத குருமார்கள் ஒன்றை ஹராம் என்ற போது அதை விலக்கி ஹலால் என்ற போது அதை ஆகுமாக்கிக் கொண்டீர்கள் இல்லையா ? அதைத்தான் அல்லாஹ் "கடவுள் ஆக்கிக் கொண்டீர்கள்'' என குறிப்பிடுகிறான் . என நபி ஸல் கூறினார்கள் . [ஆதாரம் - புஹாரி ]
10:46 | 0 comments | Read More

பஞ்ச் பட்டிக்காட்டான்[28] just4jokes!



திருனாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி பேச்சு; "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கோல்கட்டா நகரத்தை, லண்டன் நகரம் போல், உலகத் தரம் வாய்ந்த வர்த்தக நகரமாக மாற்றுவோம். டார்ஜிலிங்கை, சுவிட்சர்லாந்துக்கு இணையான சுற்றுலா தலமாக்குவோம். துறைமுகங்களை, சிங்கப்பூரில் உள்ளது போன்ற நவீன துறைமுகங்களாக்குவோம். கடற்கரையோர டிகா நகரத்தை, கோவா போல மாற்றுவோம்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; இப்பிடித்தான் எங்க ஊருல ரெண்டு பேரு மயிலாடுதுறையையும், ராமநாதபுரத்தையும் துபாயாக மாத்துவேன்னு சொன்னாங்க. மாத்தீட்டாங்களாக்கும்? அதுனால துபாயாகவும் சிங்கப்பூராகவும் மாத்த வேணாம், இருக்கிறத கெடுக்காம இருந்தா போதும்னு மக்கள் நினைக்கிறாங்க.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேச்சு : கடந்த, 34 ஆண்டுகளாக, மேற்கு வங்க மாநிலத்தை இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த காலத்தில், எவ்வித வளர்ச்சிப் பணிகளையோ அல்லது தொழிற்சாலைகள் அமையவோ, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வேலை தேடி குஜராத் மாநிலத்துக்கு, ஏராளமான வங்காளிகள் வந்துள்ளனர்; பல தொழிற்சாலைகளில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; ஒரு மாநிலத்தை சேந்தவுக அடுத்த மாநிலத்துக்கு வேலைக்கு போறதுதான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அளவுகோல்ன்னு சொன்னா, மாநிலத்த விடுங்க; இந்தியாவை சேர்த்த கோடிக்கணக்கானோர் வெளிநாட்டுல வேலைக்கு போயிருக்காங்களே! அப்ப இந்தியாவே தொழில்துறையில் முன்னேறலன்னு சொல்லப் போறீங்களா?
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா பேச்சு: மிகவும் அவசியமான காரணங்கள் இருந்தாலன்றி, வக்கீல்கள், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்களுடன் தொடர்பு வைத்து கொள்வதை, நீதிபதிகள் தவிர்க்க வேண்டும். எந்த வகையான ஆதரவையும், முன்னுரிமை தரப்படுவதையும் நீதிபதிகள் ஏற்கக்கூடாது. ஓய்வுக்கு முன், வேறு பணிகளை ஒப்புக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இவை தான் ஊழலுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. பாரபட்சமற்ற, அச்சமில்லாத, சுதந்திரமான நீதி வழங்கும் அமைப்பின் அங்கமாக நீதிபதிகள் இருக்க வேண்டும்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; நீங்க சொல்றது கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. அதேமாதிரி நீதிபதியா பதவியேத்தவுடனேயே முதல் வேலையாக முதல்வர சந்திச்சு ஆசி வாங்குறதும் சட்டத்துக்கு உட்பட்டதான்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு; எல்லா மாவட்டத்திலும், வட்டார அளவிலும் எனக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். எனக்கும் தொண்டர்கள் பலம், ஆள்பலம் உண்டு. ஆனால், நான் அமைதியாகவும், அடக்கமாகவும் உள்ளேன். தமிழகம் முழுவதும் எனது ஆதரவாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். அவர்களை நான் அடக்கி வைத்துள்ளேன். நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும். ஆனால், எனக்கு கட்சிதான் முக்கியம். தொண்டர்களை தவறாக பயன்படுத்த மாட்டேன்.
பஞ்ச் பட்டிக்காட்டான்; ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும்னு நீங்க சொல்றது நெசமுங்க. 19 பேரை கட்சியவுட்டு நீக்கி ஒரு அறிக்கைதான் வெளியிடீங்க. தமிழகம் முழுக்க உங்க கொடும்பாவி பத்தி எரியுதே.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேட்டி: காங்கிரஸ் கட்சியை, 1967ல், வீட்டுக்கு அனுப்பினார் அண்ணாதுரை. நாட்டை நாசமாக்கினதே காங்கிரஸ் தான்னு சொன்னார் அண்ணாதுரை. இன்று, தன் குடும்பத்தைக் காப்பாற்ற, காங்கிரஸ் கேட்பதையெல்லாம் தூக்கி கொடுக்கிறார் கருணாநிதி. இவர் அமைத்திருப்பது கொள்கை கூட்டணியா?
பஞ்ச் பட்டிக்காட்டான்; ரெண்டு திராவிடக் கட்சிகளும் மாத்தி மாத்தி ஆட்சி பண்ணி தமிழ்நாட்ட நாசமாக்கிட்டாங்கன்னு நீங்களும் தான் சொன்னீங்க. இப்ப அந்த ரெண்டுல ஒன்னோட போய் சேர்ந்தது மட்டும் கொள்கை கூட்டணியாக்கும்?
லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பேச்சு: லாலு பிரசாத் ஆட்சியில் இருந்த அதே நிலையில் தான் இப்போதும் பீகார் உள்ளது; ஒரு முன்னேற்றமும் இல்லை. நிதிஷ் அரசின் தோல்விகளை மக்கள் அறியும் வகையில், தீவிர பிரசார இயக்கம் விரைவில் மேற்கொள்ளப்படும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; நிதிஷ் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லன்னு சொல்ற சாக்குல லாலு ஆட்சியிலும் பீகார்ல எந்த முனேற்றமும் ஏற்படலன்னு சொல்றமாதிரி தெரியுதே?

10:45 | 0 comments | Read More

இரண்டாண்டுகளாக எண்ணற்ற பணிகள் நடைபெற்ற பள்ளிவாசல் கை விட்டு போகும் சூழ்நிலை! உதவுங்கள்!


இரண்டாண்டுகளாக எண்ணற்ற பணிகள் நடைபெற்ற பள்ளிவாசல் கை விட்டு போகும் சூழ்நிலை! உதவுங்கள்!


சென்னையின் இருதயப் பகுதியான திருவல்லிக் கேணியில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் சகோதரர் ஒருவரின் காலி நிலத்தில் அவரின் அனுமதியோடு நோன்பு நேர இப்தார்,இரவு பயான் நிகழ்சிகள் நடை பெற்றது! இது அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெற்றது நோன்பு நேரத்தில் ஐவேளை தொழுகையும் நடை பெற்று பின்னர் அதை அப்பகுதி மக்கள் நீடிக்க விரும்பி இடத்தின் உரிமையாளரும் கட்டிடம் கட்டும் சூழல் தள்ளிப் போனதால் அது பள்ளி வாசலாகவே செயல் பட்டு வந்தது!

ரமலான் மாதத்தில் இப்தார் இரவுத் தொழுகை ,தொடர் பயான் என நிரம்பி வழிந்த பள்ளி ரமலானுக்கு பின்னும் மக்களால் நிறைந்தது! ஜும்மா அன்று நெருக்கி நின்றாலும் ரோட்டுக்கு வரும் சூழலும் , வியாழன் தோறும் பெண்கள் பயானில் கால் வைக்க இடமில்லாத அளவிலும் , சனி தோறும் ஆண்கள் பயான் , ஞாயிறு தோறும் மகல்லா சகோதரர்களின் , மருத்துவ மனை தாவா , முஸ்லிம் அல்லாதவர்களுக்கான இஸ்லாம் அறிமுக நிகழ்ச்சி இஸ்லாத்தை ஏற்றோருக்கான வழி காட்டு நிகழ்ச்சி, அவர்களுக்கான கத்னா, அபிடவுட், ஏற்பாடுகள் , மேலும் சகாத், நன்கொடைகள் மூலம் பல்வேறு மருத்துவ உதவிகள் கல்வி உதவிகள், வாழ்வாதார உதவிகள், மருத்துவ முகாம்கள் , கல்வி வழி காட்டு முகாம்கள் என எண்ணற்ற பணிகள் இறையருளால் நடை பெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடத்தின் உரிமையாளர் அங்கு வந்து நேரில் பார்த்துவிட்டு நீங்கள் பள்ளியாக சிறந்த பணிகள் நடை பெற்று வருவதால் நீங்களே விலைக்கு எடுத்து கொள்ளுங்கள் என விலையையும் நிர்ணயம் செய்து சதுர அடி 7500 ருபாய் [820sq] என ஒப்புக் கொண்டு அதற்க்கு மற்றக அவருக்கு வேறு இடம் பார்த்து அதற்க்கு அவர் அக்ரிமேண்டும் போட்டு வரும் 17.5.11 உடன் அந்த இடத்திற்கு நம்முடைய தொகையை கொடுக்க வேண்டும்! இல்லை என்றால் இரண்டு ஆண்டுகளாக எந்த முன் பணமோ வாடகையோ இன்றி கொடுத்த அவரிடம் இடத்தையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும்!

அன்பார்ந்த சகோதரர்களே ! வெளி நாடு வாழ் நண்பர்களே ! மிகக் குறைந்த நாட்களே உள்ளதால் , நற்பணிகள் நடை பெறும் இந்த இடம் நம் கையை விட்டு போகாமல்; இருக்க இன்ஷா அல்லாஹ் சதுர அடி 7500 ருபாய் என்கிற அளவில் நாமும் நம் நண்பர்களையும் வாங்கத் தூண்டுவோம்! மேலும் தங்கள் பெற்றோருக்காக வாங்கி அதன் நன்மையை அவர்களுக்காக சேர்க்கும் அன்பர்களை நாடுவோம், மேலும் பள்ளிக்காக தரும் தனவந்தர்களை அறிமுகப் படுத்துவோம்! குறுகிய அல்லது நீண்ட கால கடன்களாக அல்லாஹ்விற்காக அழகிய கடன் தரும் அன்பர்களை நாடுவோம் ! மறுமையில் அல்லாஹ் வாக்களிக்கும் மாளிகையை பெற எல்லா வகைகளிலும் முயற்சிப்போம் ! மேலும் நம்முடைய பிரார்த்தனைகளில் இந்த விஷயத்தை மறவாமல் அணு தினமும் கேட்போமாக ! அல்லாஹ் நம் காரியங்களை சீராக்கி வைப்பான் .

இது தொடர்பாக நீங்கள் அழைக்க வேண்டிய தொலை பேசி எண்கள் ; 9677103519, 9600037600 9840078002, 9840077765
நன்கொடைகள் அனுப்ப வேண்டிய முகவரி : அல்முமின் டிரஸ்ட் 32 அங்க முத்து தெரு பெசன்ட் ரோடு ராயபேட் ,சென்னை -14 .
almumin trust a\c no : 301500301000487 vijaya bank triplicane.branch
10:43 | 0 comments | Read More

கடையநல்லூர் கலகம்! KNTJ உதயம் ! பி.ஜே. Vs சைபுல்லாஹ் ஹாஜா.

கடையநல்லூர் கலகம்! KNTJ உதயம் !
பி.ஜே. Vs சைபுல்லாஹ் ஹாஜா.

தன்னைத் தவிர வேறு யாரும் தலையெடுக்க கூடாது, எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எவரும் இருக்கக் கூடாது, தன்னை மட்டுமே தக்லீது செய்யும் ஒரு கூட்டத்தை உருவாக்கி தனி மத்ஹபு என்கிற ரீதியில் பொய் கொண்டிருக்கும் பி.ஜே.வின் பிரித்தாளும் பாலிசியால் கொள்கை சகோதரர்களுக்கு மத்தியில் மீண்டும் ஒரு பிளவு உருவாகியுள்ளது!

கடந்த சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த கடையநல்லூர் விவகாரம் வெடித்து மற்றுமொரு பிளவு ஏற்பட்டுள்ளது! தன் பெயரில் முஸ்லிம் டிரஸ்ட் , மற்றும் முஸ்லிம் மீடியா டிரஸ்ட் என இரு டிரஸ்ட் களை வைத்துக் கொண்டு , அமைப்பில் உள்ள வேறு யாரும் டிரஸ்ட் வைத்துக் கொள்ளக் கூடாது ! என குரான் ஹதிஸ் அல்லாத தானே வகுத்துக் கொண்ட ஒரு கூறு கெட்ட கொள்கைக்காக இன்னும் எத்தனை பிரிவுகளோ தெரியவில்லை!

இந்த பிரச்சனையால் முதலில் கீழக்கரை KECT , மற்றும் நாச்சியார் கோயில் பள்ளி எனத் தொடங்கி தற்போது கடைய நல்லூரிலும் வெடித்துள்ளது! சமிபத்தில் த.த.ஜ.வில் இணைந்த த.மு.மு.க. முன்னால் மாநில செயலாளர் புளியங்குடி செய்யது கூட புளியங்குடி தவ்ஹீத் பள்ளியை த.த.ஜ.வில் இணைக்க மறுத்து த.த.ஜ.வில் இருந்து வெளியேறினார் [இந்த பள்ளியில் கடந்த வாரம் ஜும்மா உரை சைபுல்லாஹ்] என்பது குறிப்பிட தக்கது!

டிரஸ்ட் என்பது கூடாது த.த.ஜ.வில் இணைப்பது தான் சரி என்றால் முதலில் தன் பெயரில் உள்ள இரு டிரஸ்ட் களையும் இணைத்து அதில் த.த.ஜ. உறுபினர்களை சேர்க்க வேண்டும்! அதை செய்வாரா? தன்னுடைய மகன்கள் மற்றும் சகலை மகன்கள், மருமகன் பெயரில் திருட்டுத் தனமாக பதிவு செய்த INTJ சங்கத்திற்கு 20 லட்சம் மதிப்புள்ள சொத்திருப்பதாக நீதி மன்றத்தில் கூறியுள்ளரே அந்த சங்கத்தில் த.த.ஜ.வை சேர்ந்த அனைவரும் உறுப்பினராக்கி விட்டாரா? உபதேசம் எல்லாம் ஊருக்கத் தானா?

தற்போது இந்தப் பிரச்சனையால் கடையநல்லூர் த.த.ஜ உடைந்துஇரண்டானதோடு ரியாதிலும் TNTJ -KNTJ என இரண்டாக உடைந்து நிற்கிறது! கடையநல்லூரில் போய் மக்களின் மண்டையை கழுவ நினைத்த பி.ஜே.விற்கு பெருந்தோல்வி மட்டுமே மிச்சமானது! அப்துன்நாசிர் மூலம் பி.ஜே துவங்கிய கலகம் மஸ்ஜிதுல் முபாரக் நலச் சங்கம் என உருவாகி தங்கள் சொத்தை தற்காத்துள்ளனர் கடைய நல்லூர் மக்கள். வெறும் ஆம்புலன்ஸ் வேனை மட்டுமே சைபுல்லஹ்விடம் இருந்து வாங்கிக் கொண்டு வெளியேறி உள்ளனர்த.த.ஜ.வினர்.

தற்போது அண்ணனின் அடி வருடிகள் வழக்கம் போல், அண்ணனின் வழக்கமான பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டுகளை சைபுல்லாஹ் மேல் அள்ளி வீசத் துவங்கியுள்ளனர். இணையத் தளம் நாறிக் கொண்டுள்ளது! மக்கள் கேட்பதெல்லாம் சைபுல்லாஹ் மேல் பல வருடங்களாக சொல்லப் பட்டு வரும் குற்ற சாட்டுகளை பள்ளிவாசலை எழுதிக் கொடுக்க மறுத்து பி.ஜே.வின் கட்டளையை புறக்கநிதவுடன் வெளியிட்டு நாறடிக்கிறீர்களே! சைபுல்லாஹ் தரப்பினர் பள்ளியை பி.ஜே.சொன்னபடி எழுதிக் கொடுத்திருந்தால் அவர் புனிதமானவர் ! உங்களின் பரிசுத்த இயக்கத்தில் மேலாண்மை செய்ய தகுதியானவர் ! எதிர்த்தால் இழிவானவர் !. என்னே உங்கள் நிலைப்பாடு !
10:37 | 0 comments | Read More

சைபுல்லாஹ் பி.ஜே.விற்கு எழுதிய கடிதம் !






10:33 | 0 comments | Read More